

அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்துள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி(27). இவர், தனது வீட்டின் பின்புறம் ஒரு கஞ்சா செடியை அலங்காரச் செடி போல, வளர்த்து வந்துள்ளார். இந்தச் செடி 5 அடி உயரத்துக்கு வளர்ந்துள்ளது.
இந்நிலையில், இந்த கஞ்சா செடி குறித்து செந்துறை போலீஸாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு சென்ற போலீஸார் கஞ்சா செடியைக் கைப்பற்றியதுடன், செடியை வளர்த்த வீரமணியை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.