

திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவ ராசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் இன்று (ஜூன் 24) காலை 9 மணியளவில் தொடங்கி நடைபெறவுள்ளது. தடுப்பூசி முகாம் நடைபெறும் அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்கள் விவரம்:
நவல்பட்டு, இனாம்குளத்தூர், குழுமணி, சிறுகாம்பூர், புதூர் உத்தமனூர், வளநாடு, புத்தாநத்தம், வையம்பட்டி, தண்டலைப்புத்தூர், தாத்தையங் கார்பேட்டை, வீரமச்சான்பட்டி, காட்டுப்புத்தூர், உப்பிலியபுரம்.
இந்த முகாமில் 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிக ளுக்கு கரோனா தடுப்பூசி போடப்படும். மாற்றுத் திறனாளிகள், தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகிய வற்றை எடுத்து வர வேண்டும்.