

பயிர்க்கடன் தள்ளுபடியில் முறைகேடு நடந்துள்ளதாகப் புகார் எழுந்ததையடுத்து, வெளிமாவட்ட அதிகாரிகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கூட்டுறவுச் சங்கங்களில் 2021 ஜன.31 வரை விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களை, அப்போதைய முதல்வர் பழனி சாமி தள்ளுபடி செய்தார். இதையடுத்து கூட்டுறவுச் சங்கங்களில் கடன் தள்ளு படிக்கான பயனாளிகள் பட்டியலை, அந்தந்த சரக மேற்பார்வையாளர், கள மேலாளர், கூட்டுறவு சார்பதிவாளர் ஆகி யோரைக் கொண்ட குழு ஆய்வு செய்தது.
மேலும் மண்டல இணைப் பதிவாளரால் அமைக்கப்பட்ட 3 உறுப்பினர் கொண்ட குழுவும் பயனாளிகள் பட்டியலை ஆய்வு செய்தது. தொடர்ந்து வெளிமாவட்ட அதி காரிகள் குழு ஒவ்வொரு சங்கத்திலும் ரேண்டம் முறையில் 10 சதவீத பட்டியலை ஆய்வுசெய்து பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையில் சட்டப் பேரவைத்தேர்தல் முடிந்து தற்போது திமுக ஆட்சி அமைத்துள்ளது.
இந்நிலையில் ஏற்கெனவே அதிமுக அரசு தள்ளுபடி செய்த பயிர்க் கடனிலேயே பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
பல சங்கங்களில் ஜன.31-க்கு பிறகு வழங்கப்பட்ட நகைக் கடன்கள் முன்தே தியிட்டு பயிர்க்கடனாக மாற்றப்பட்டு தள்ளுபடி செய்தது, பயிர்க்கடன் வழங் காத காலங்களில் வழங்கப்பட்ட பிற கடன் களையும் பயிர் கடன்களாக மாற்றியது, சரக மேற்பார்வையாளர், கள மேலாளர், கூட்டுறவு சார்பதிவாளர் குழு ஏற்க மறுத்த பட்டியலை மேல் முறையீட்டின் பேரில், பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்தது,
சங்கங்களில் நிதி இல்லாததால் கடன் தாரர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யாமல் பயிர்க்கடன் அல்லது விவசாய நகைக்கடன் வழங்கியது, கடன் வழங்காமல் வைப்புத் தொகையாக மாற்றியது உள்ளிட்ட புகார் கள் எழுந்தன.
இதையடுத்து மீண்டும் வெளி மாவட்ட அதிகாரிகள் மூலம் ஜூலை 15-ம் தேதிக்குள் பயிர்க்கடன் தள்ளுபடி பட்டியலை 100 சதவீதம் ஆய்வுசெய்ய கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆய்வில் கடந்த காலத்தில் முறை கேட்டில் ஈடுபட்ட கூட்டுறவு அதிகாரி கள் பலர் சிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப் படுகிறது.