காரையாறு பழங்குடியின மக்களுக்கு தடுப்பூசி :

அம்பாசமுத்திரம் வட்டம் காரையாறு பகுதியிலுள்ள காணி பழங்குடியின மக்களுக்கான கரோனா தடுப்பூசி முகாமை ஆட்சியர் வே. விஷ்ணு தொடங்கி வைத்தார்.
அம்பாசமுத்திரம் வட்டம் காரையாறு பகுதியிலுள்ள காணி பழங்குடியின மக்களுக்கான கரோனா தடுப்பூசி முகாமை ஆட்சியர் வே. விஷ்ணு தொடங்கி வைத்தார்.
Updated on
1 min read

காரையாறு பகுதியில் காணி பழங்குடியின மக்களுக்கான கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. ஆட்சியர் வே.விஷ்ணு தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியதாவது:

காரையாறு பகுதியில் சின்னமயிலாறு, பெரியமயிலாறு மற்றும் இஞ்சிகுழி பகுதிகளில் உள்ள காணி பழங்குடியின மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளன. காணி மக்கள் தயாரிக்கும் அனைத்து பொருட்களையும் திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை பகுதியில் விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக ரூ. 7.5 லட்சம் மதிப்பிலான சரக்கு வாகனம் வழங்கப்பட்டுள்ளது. காணி மக்கள் தயாரிக்கும் உணவு பொருட்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் நபார்டு திட்டம் மூலம் ஆர்கானிக் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

திருநெல்வேலியில் புதிய பேருந்து நிலையம் அருகில் மகளிர் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள கடைகளில் ஒரு பகுதி காணி மக்களுக்கு ஒதுக்கப்படும். காணி மக்களின் வாழ்க்கை வரலாற்றினை ஆவணங்களாக்க நடவடிக்கைகள் மே ற்கொள்ளப்படும். இந்த பகுதியில் உள்ள படித்த இளைஞர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

முன்னதாக பெண்களின் வாழ்வாதார முன்னேற்றத்துக்காக 5 பெண்களுக்கு சுழல் நிதியாக தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in