நிதி நிறுவனங்களுக்கு தென்காசி ஆட்சியர் எச்சரிக்கை :

நிதி நிறுவனங்களுக்கு தென்காசி ஆட்சியர் எச்சரிக்கை :
Updated on
1 min read

தென்காசி ஆட்சியர் கோபால சுந்தரராஜ் அறிக்கை:

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு குறிப்பிட்ட சில தளர்வுகளுடன் அமலில் உள்ளது. இந்நிலையில், அவசர தேவைக்கென தனியார் நிதி நிறுவனங்களை நாடி கடன் பெற்ற மக்களிடம், கடன் தவணைத் தொகை மற்றும் வட்டி தொகையை உடனடியாக செலுத்தக் கோரி, சில நிறுவனங்கள் மிரட்டுவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் வருகின்றன. அந்த புகார்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இது தொடர்பான புகார்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக மகளிர் திட்ட பிரிவு தொலைபேசி எண் 04633 290822-க்கு அலுவலக நாட்களில் தொடர்பு கொண்டு புகாரை பதிவு செய்யலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in