

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி முதல்வர் (பொ) என்.வி.சுஜாத்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் இயங்கி வரும் மீன் வளர்ப்பு துறை சார்பில் 'கிப்ட் திலேப்பியா மீன் வளர்ப்பு" பற்றிய ஒரு நாள் இணையதள வழியிலான பயிற்சி 28.06.2021 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை வழங்கப்பட உள்ளது.
இப்பயிற்சியில் கிப்ட் திலேப்பியா மீன் குஞ்சுகளை இருப்பு செய்வதற்கு முன் செய்ய வேண்டிய மேலாண்மை முறைகள், அறுவடை செய்த மீன்களை சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட தலைப்புகளில் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 27.06.2021 மாலை 5 மணிக்குள் ரூ.300 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பயிற்சியின் முடிவில் சான்றிதழ் மற்றும் பயிற்சி கையேடு மின் அஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், மீன் வளர்ப்புத் துறை, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடி - 628 008, செல்போன் எண்-9442288850, மின் அஞ்சல்: athithan@tnfu.ac.in என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.