

திருநெல்வேலியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் என்.கணேசராஜா தலைமை வகித்தார்.
அதிமுகவுக்கும் சசிகலாவுக் கும் எவ்வித தொடர்போ, சம்பந்தமோ இல்லை. எனவே, அவருடன் தொலைபேசியில் உரையாடிய அதிமுக நிர்வாகி களை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று, கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. நீட் தேர்வில் திமுக இரட்டை வேடம் போடுவதாக கூறி, அக் கட்சிக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுக அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவம், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் விஜிலா சத்தியானந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.