

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட 6 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
வேலூர் போக்குவரத்து ஆணையர் சுரேஷ் அறிவுரைப் படி, கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் அன்புசெழியன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் கிருஷ்ணகிரி யில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது, கேரள மாநில பதிவு எண் கொண்ட 6 ஆம்னி பேருந்துகள் தமிழக அரசுக்கு சாலை வரி செலுத்தாமல் இயக்கப்படது கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடமிருந்து சாலை வரியாக ரூ.2 லட்சத்து 99 ஆயிரத்து 228-ம், அபராதமாக ரூ.50 ஆயிரமும் வசூலிக்கப்பட்டது.
மேலும், பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளின் நலன் கருதி அந்தப் பேருந்துகள் பயணிக்க அனுமதிக்கப்பட்டது. “வாகனத் தணிக்கை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீவிரப்படுத்தப்படும்” என வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித் தனர்.