

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடியஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள் ளது. இந்நிலையில் நேற்று கடலூர் மாவட்டத்தில் உள்ள 11 அரசு போக்குவரத்துக் கழக பணி மனைகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 600 அரசு பேருந்துகளையும் ஊழியர்கள் சுத்தப்படுத்தி, கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். பேருந்துகளை இயக்க அரசு எப்போது உத்தரவிட்டாலும் பேருந் துகள் இயக்கப்படும்.
அதற்காக பேருந்துகள் தயார்படுத்தப்பட்டு வருகிறது என்று அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.