

புதுக்கோட்டை மாவட்டம் விரா லிமலை வட்டம் மண்டையூர் அருகே ஆலங்குடியில் ஹோட் டல் நடத்தி வரும் ராஜேந்தி ரனிடம் நரியப்பட்டியைச் சேர்ந்த சிலர் நேற்று முன்தினம் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டனர்.
இதை, தட்டிக்கேட்ட ஆலங் குடியைச் சேர்ந்த வினோத் குமார்(30), அவரது தந்தை ஜம்பு லிங்கம்(60), சகோதரர் பூவிழி அரசன்(32), உறவினர் முருகேசன் மனைவி சீதாலட்சுமி(30) ஆகியோரை நரியப்பட்டியைச் சேர்ந்த முத்துசாமி மகன்கள் தர்மதுரை(33), சிலம்பரசன், கருப்பையா(31) உட்பட 10 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கினர்.
இதில், காயமடைந்த வினோத் குமார், ஜம்புலிங்கம், பூவிழி அரசன், சீதாலட்சுமி ஆகியோர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி வினோத் குமார் நேற்று உயிரிழந்தார்.
இதுகுறித்து 10 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்த மண்டையூர் போலீஸார், 7 பேரை நேற்று கைது செய்தனர்.