சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம் :

சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்  :
Updated on
1 min read

தண்டராம்பட்டு அருகே 15 வயது சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது.

தி.மலை மாவட்டம் தண்டராம் பட்டு அருகே 15 வயது சிறுமிக் கும், சேலம் பகுதியில் வசிக்கும் 28 வயது இளைஞருக்கும், தானிப் பாடியில் உள்ள ஒரு கோயிலில் நேற்று திருமணம் நடைபெற இருந் தது. இது குறித்து தகவலறிந்த வருவாய்த் துறையினர், சமூக நலத் துறையினர் மற்றும் காவல் துறையினர் சிறுமியின் வீட்டுக்கு சென்று நேற்று முன் தினம் இரவு விசாரணை நடத்தினர். அப்போது, சிறுமியின் வயது 15 என்பதை உறுதி செய்தனர்.

மேலும், 18 வயதுக்கு முன்பாக திருமணம் செய்து வைத்தால், மணமகன் மற்றும் மணமக்களின் பெற்றோர் மீது சட்டப்படி நடவ டிக்கை எடுக்கப்படும் என எச்சரித் துள்ளனர். இதையடுத்து, திரு மணம் நிறுத்தப்பட்டது. மேலும், சிறுமியை மீட்டு தி.மலையில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in