

திருச்சி ஜங்ஷன் மேம்பால பணிக்குத் தேவையான ராணுவ நிலத்தை பெற இன்னும் ஒரு வாரத்துக்குள் அனுமதி கிடைக்கும் என திருச்சி எம்.பி சு.திரு நாவுக்கரசர் தெரிவித்தார்.
திருச்சி ஜங்ஷன் மேம்பால பணிக்கு மன்னார்புரம் ராணுவ நிலத்தை பெறு வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், பணி கள் பாதியிலேயே நிற்கின்றன.
இங்கு கையகப்படுத்தப்படும் ராணுவ நிலத்துக்கு இணையாக, 0.663 ஏக்கர் மாற்று நிலத்தை, அதற்கருகிலேயே உள்ள தமிழ்நாடு சிறப்புக்காவல் படை வளாகத்திலிருந்து பெற்றுக்கொள்ளு மாறு ராணுவ நிர்வாகம் மற்றும் மத்திய அரசுக்கு தமிழக அரசும், எம்.பி.க்களும் பலமுறை கோரிக்கை விடுத்தும் இது வரை தீர்வு கிடைக்கவில்லை.
இந்நிலையில் திருச்சி எம்.பி சு.திருநாவுக்கரசர் நேற்று டெல்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்து இது தொடர்பாக மனு அளித்தார்.
பின்னர் இதுகுறித்து அவர் ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது:
மன்னார்புரத்திலுள்ள ராணுவ நிலத் தைப் பெறுவது தொடர்பாக கடந்த மாதம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்துப் பேசியதன் பேரில், ராணுவ நிலத்தை பரிமாற்றம் செய்வதற்கான ஆவணங்கள் அனைத் தும் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த சூழலில் இன்று(நேற்று) மீண்டும் சந்தித்து, இந்த பாலத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டி யதன் அவசியம் குறித்து விளக்கினேன்.
அப்போது, ஒரு வாரத்துக்குள் இதற் கான உத்தரவு வெளியிடப்படும் என அவர் உறுதியளித்துள்ளார் என்றார்.