புதுக்கோட்டையில் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் :

புதுக்கோட்டையில் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

பெட்ரோல், டீசல் விலை உயர் வைக் கண்டித்தும், ஆட்டோவில் பயணிக்க இ-பதிவு முறையை ரத்து செய்ய வலியுறுத்தியும் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆட்டோ தொழிலாளர் கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாவட்டத் தலைவர் க.முகமதலி ஜின்னா, கறம்பக்குடியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்து்க்கு மாவட்டச் செயலாளர் எ.தர் தலைமை வகித்தனர்.

இதேபோல, அறந்தாங்கி, அரிமளம், திருமயம், பொன்னம ராவதி உள்ளிட்ட இடங்களிலும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in