பிராணிகள் பாதுகாப்புக்கு  நிதி ஒதுக்க கோரிக்கை :

பிராணிகள் பாதுகாப்புக்கு நிதி ஒதுக்க கோரிக்கை :

Published on

திருநெல்வேலி ஜீவகாருண்யம் மனிதநேய சங்க நிறுவன தலைவர் தெ.ஆறுமுகம் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:

வனங்கள் ஆக்கிரமிப்பு, அழித்தல் நடவடிக்கைகளால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும். வண்டலூர் உயிரியல் பூங்காவில் கரோனாவால் சிங்கங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சென்னையிலுள்ள பாம்பு பண்ணை பராமரிப்பை அரசு முழுமையாக ஏற்க வேண்டும். ஊரடங்கு காலத்தில் தெருக்களில் திரியும் நாய்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவு கொடுத்து பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்கு அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். பிராணிகளை துன்புறுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in