

கோயில் அர்ச்சகர்கள், பட்டாச் சாரியர்கள் மற்றும் பூசாரிகளுக்கு கரோனா நிவாரணத் தொகை மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் களில், நிலையான மாத ஊதிய மின்றி, பணியாற்றி வரும் அர்ச்சகர் கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கரோனா கால நிவாரண உதவித்தொகை ரூ.4000 மற்றும் 10 கிலோ அரிசி, 15 வகையான மளிகைப் பொருட்களை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டார்.
இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோயில்களில் காணிக்கை மட்டுமே பெற்று பணிபுரிந்து வரும் 139 அர்ச்சகர் கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகள், மற்றும் ஒரு கால பூஜை திட்டம் நடைபெறும் கோயில்களில் பணியாற்றி வரும் 604 அர்ச்சகர்கள் உட்பட 743 பேருக்கு கரோனா நிவாரணம் வழங்கப் படுகிறது.
ஈரோடு திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில் நடந்த நிகழ்ச்சியில் அர்ச்சகர்களுக்கு கரோனா நிவாரணம் வழங்கி, வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.
ஈரோடு ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி, வருவாய் கோட்டாட்சியர் பெ.பிரேமலதா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கே.செ.மங்கையர்கரசி, உதவி ஆணையர் அன்னகொடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சேலம்
சேலம் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திரன் கரோனா நிவாரணத் தொகை மற்றும் பொருட்களை அர்ச்சகர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு வழங்கினார்.
இதில் உதவி ஆட்சியர் (பயிற்சி) முகமது சபிர் ஆலம், சேலம் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுவர்த்தினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.