அதிமுக சார்பில் கண்டன கூட்டம் சசிகலாவை கண்டித்து தீர்மானம் :

அதிமுக சார்பில் கண்டன கூட்டம் சசிகலாவை கண்டித்து தீர்மானம்   :
Updated on
1 min read

தருமபுரி மாவட்ட அதிமுக சார்பில் சசிகலாவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுக-வின் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக செயல்படும் சசிகலாவின் நடவடிக்கை யை கண்டித்து தருமபுரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நேற்று கண்டனக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கட்சியின் மாவட்ட அவைத் தலைவர் தொ.மு.நாகராசன் தலைமை வகித்தார். கூட்டத்தில், சசிகலாவை கண்டித்து கண்டன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், தமிழக சட்டப் பேரவை எதிர்க்கட்சி செயலாளரும், எம் எல் ஏ-வுமான கே.பி.அன்பழகன், கழக மாநில அமைப்புச் செயலாளர் சிங்காரம், மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், எம் எல் ஏ-க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பழனிசாமி, தருமபுரி நகர செயலாளர் பூக்கடை ரவி, கூட்டுறவு பணியாளர் சங்க மாநில செயலாளர் அருள்சாமி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தகடூர் விஜயன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் நல்லத்தம்பி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

ஈரோடு

இக்கூட்டத்தில் அதிமுக மாவட்டத் தலைவர் பி.சி.ராமசாமி,முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.தென்னரசு, சிவசுப்பிர மணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in