

திருச்சி மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக பொதுமக்களிடம் இருந்து நேற்று வரை ரூ.2,08,05,016 வரப் பெற்றுள்ளது. இதில், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.2,01,21,062 மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகத்துக்கு உதவும் வகையில் மாவட்ட ஆட்சியர் பெயரில் ரூ.6,83,954 வரப் பெற்றுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.