

திருச்சி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலர் அனுசுயா உத்தரவின்பேரில், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தீத்தடுப்புப் பயிற்சி, ஒத்திகை நேற்று நடைபெற்றது. கோயிலில் திடீரென தீவிபத்து ஏற்பட்டால், அதைக் கட்டுப்படுத்துவது, கூட்ட நெரிசல் ஏற்பட்டால் அதிலிருந்து பக்தர்களை மீட்பது உள்ளிட்டவை குறித்து சமயபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையிலான வீரர்கள் செயல்விளக்கம் அளித் தனர்.
இந்நிகழ்ச்சியில், கோயில் இணை ஆணையர் சி.கல்யாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.