அரசு காப்பீட்டு கழகம் நிவாரணம் அறிவிப்பு :

அரசு காப்பீட்டு கழகம் நிவாரணம் அறிவிப்பு  :
Updated on
1 min read

தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக திருநெல்வேலி மண்டல துணை இயக்குநர் எஸ்.கிருஷ்ணகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தின் காப்பீட்டாளரின் வாரிசு தாரர்களுக்கு காப்பீட்டாளரின் 90 சதவீத சராசரி ஊதியம் அல்லது குறைந்தபட்சமாக ரூ.1,800 மாதாந்திர நிவாரணத் தொகையாக வழங்கப்படும். இத் திட்டத்தில் பயன்பெற கரோனா தொற்றால் இறந்த காப்பீட்டாளர், நோய் தொற்று கண்டறிந்த தேதியில் இருந்து குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு முன்பே இஎஸ்ஐசி-ல் காப்பீட்டாளராக பதிவு செய்திருக்க வேண்டும்.

நோய் தொற்று கண்டறிந்த தேதிக்கு முந்தைய ஓராண்டில் 70 நாட்கள் சந்தா செலுத்தியிருக்க வேண்டும். இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் பயன்பெறும் மகப்பேறு பயனாளிகள், தற்காலிக ஊன உதவித் தொகை பெறும் பயனாளிகள் மற்றும் நீண்டகால உதவித் தொகை பெறும் பயனாளிகள் விடுப்பில் இருக்கும்போது கரோனா தொற்றால் இறக்க நேரிட்டால், அவர்களது வாழ்க்கை துணை ஆண்டுக்கு ரூ.120 செலுத்தி இஎஸ்ஐசி மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருந்தகத்தில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். விவரங்களுக்கு தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக திருநெல் வேலி துணை மண்டல அலுவலக த்தையோ, இ.எஸ்.ஐ.சி கிளை அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in