

தென்காசி மாவட்டத்தில் உள்ள 8 வட்டாட்சியர் அலுவலகங் களிலும் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) வரும் 23-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பொதுமக்கள் வருவாய்த் தீர்வாயம் தொடர்பாக தங்களது கோரிக்கை மனுக்களை, தகுந்த ஆவணங்களுடன் கட்டணம் ஏதுமின்றி இ-சேவை மையங் கள் அல்லது https://gdp.tn.gov.in/jamabandhi என்ற இணையதளத்தில் 31.7.2021 வரை பதிவேற்றம் செய்து பயனடையலாம்.
இ-சேவை மையங்கள் மற்றும் இணையதளம் மூலம் பெறப்படும் மனுக்கள் தீர்வு காணப்பட்டு, பொதுமக்களுக்கு இணையம் மூலமாகவே பதில் அனுப்பப்படும். வருவாய்த் தீர்வாயத்தின்போது வட்டாட்சியர் அலுவலகங்களில் பொதுமக்களிடம் நேரில் கோரிக்கை மனுக்கள் பெறப்படாது என்பதால், பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை நேரில் அளிக்க வேண்டாம் என்று, தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.