சேலத்தில் இன்று காய்ச்சல் கண்டறியும் பகுதிகள் அறிவிப்பு :

சேலத்தில் இன்று காய்ச்சல் கண்டறியும் பகுதிகள் அறிவிப்பு :
Updated on
1 min read

சேலத்தில் இன்று காய்ச்சல் கண்டறியும் முகாம் நடக்கும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் மாநகராட்சி பகுதியில் இன்று (நேற்று) 48 பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டது. இதில், 3,427 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இன்று (18-ம் தேதி) காலை 9 மணி முதல் 11 மணி வரை வீரபாண்டியார் நகர், அந்தோணிபுரம், போடி நாயக்கன்பட்டி, சூரமங்கலம் மெயின்ரோடு, மூலபட்டன் வட்டம், ஜெயாநகர் ஹவுசிங்போர்டு, பழனியப்பா நகர், சாமிலிங்கம் மூர்த்தி தெரு, ஆட்டோ காலனி, அசித் தெரு, வள்ளி நகர், விளையாட்டு மாரியம்மன் கோயில் தெரு, இந்திரா நகர், ராமு தெரு, வடக்கு முனியப்பன் கோயில் தெரு, தாகூர் தெரு ஆகிய பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடக்க உள்ளது.

மேலும், பிற்பகல் 11 மணி முதல் 1 மணி வரை லட்சுமண் நகர், சோளம்பள்ளம், ஆண்டிப்பட்டி காலனி, பெரியகிணறு தெரு, சாரதா காலேஜ் ரோடு, மகாலட்சுமி நகர், மரவனேரி, மாரியம்மன் கோயில் தெரு, பெண்ணாடம் ராமசாமி தெரு, பேச்சியம்மன் கோயில் தெரு, குருநாதன் காடு, ராம சுந்தரம் தெரு, சாமுண்டி தெரு, நடுத்தெரு, நேதாஜி தெரு, சின்ன பாய்ச்சல் காடு ஆகிய பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடக்கவுள்ளது.

மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மாரியம்மன் கோயில் தெரு, பிள்ளையார் நகர், ஐயர் தெரு, நரசிம்மன் ரோடு, சரஸ்வதி தெரு, வாத்தியார் தோட்டம், தோப்புக் காடு, ஷேக் காசீம் தெரு, புதுத்தெரு, எருமாபாளையம் மெயின் ரோடு அப்பர் தெரு, அருண  தெரு, பச்சியம்மன் கோயில் தெரு, தொல்காப்பியர் தெரு, முனிசிபல் தோட்டம், சங்ககிரி மெயின் ரோடு, செல்வமுத்து மாரியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளிலும், பெரிய புதூர் பள்ளியில் சித்த மருத்துவ முகாம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in