கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் - கரோனா பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆட்சியர் தர் ஆய்வு :

கள்ளக்குறிச்சியை அடுத்த ஏமப்பேரில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினைஆட்சியர் தர் பார்வையிட்டார்.
கள்ளக்குறிச்சியை அடுத்த ஏமப்பேரில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினைஆட்சியர் தர் பார்வையிட்டார்.
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா பாதுகாப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் நேற்று ஆய்வுசெய்தார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் ஏமப்பேரில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பூசி முகாமினை நேற்று பார்வையிட்டார்.

பின்னர், கள்ளக்குறிச்சி நகராட்சி 15-வது வார்டில் முன் களப்பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்களை கண்டறியும் பணிகளை ஆய்வு செய்தார். 1-வது வார்டில் நடைபெற்ற காய்ச்சல் தடுப்பு முகாமினை ஆய்வு செய்தார். பின்னர் சேலம் - சென்னை புறவழிச்சாலையில் தச்சூர் அருகே முகக்கவசம் அணியாமல் வாகனங்களில் வருபவர்களை சோதனையிட்டு அபராதம் வசூ லிக்கப்படுவதையும், மேலும்,அவர்களுக்கு கரோனாபரிசோதனை மேற்கொள்வதை யும் ஆய்வு செய்தார்.

மேலூரில் அமைக்கப்பட்டுள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கான கரோனா சிகிச்சை மையத்தினை ஆய்வு செய்தார்.

நோய்த் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளவர்களிடம் மருத்துவ வசதி மற்றும் உணவு வசதிகள் குறித்து கேட்டறிந்தார். ஏ.கே.டி. கல்வி நிலையத்தில் அமைக் கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தினையும், நகராட்சி குப்பை கிடங்கு மற்றும் தகனமேடை ஆகியவற்றை ஆய்வுசெய்தார்.

பின்னர், சிறுவங்கூர் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் உள்ள படுக்கை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். கள்ளக்குறிச்சி அரசு தலைமைமருத்துவமனையில் அமைக்கப் பட்டுள்ள கரோன சிகிச்சை மையத்தினையும் ஆய்வு செய்தார்.

சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சதீஷ்குமார், கள்ளக் குறிச்சி வட்டாட்சியர் பிரபாகரன், கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் குமரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in