

விழுப்புரத்தில் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் மூலம் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணனின் ஏற்பாட்டில் நேற்று விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் முன்பு 300 சலவை தொழிலாளர் குடும்பங்களுக்கு அமைச்சர் பொன்முடி அரிசி, காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார். அப்போது மாவட்ட செயலாளரான விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி, மாவட்ட அவைத்தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், மாவட்ட துணை செயலாளர் புஷ்பராஜ், நகர செயலாளர் சக்கரை, பொதுக்குழு உறுப்பினர் பஞ்சநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.