

திருநாவலூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஏ.ஜெ.பன்னீர்செல்வம் உடல் நலக் குறைவால் உயிரிழந் ததற்கு ஓபிஎஸ், இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனி சாமி ஆகியோர் நேற்று வெளி யிட்ட இரங்கல் செய்தியில், “கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப் பினர் ஏ.ஜெ.பன்னீர்செல்வம் உடல் நலக் குறைவால் மரணமடைந்து விட்டார் என்று செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றோம். கட்சிமீதும், தொடர்ந்து கட்சித் தலைமைமீதும் மிகுந்த விசுவாசம் கொண்டுபணியாற்றி வந்த பன்னீர்செல் வத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வ துடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.