கோயில் நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை: - அமைச்சர் எச்சரிக்கை

கோயில் நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை: -  அமைச்சர் எச்சரிக்கை
Updated on
1 min read

சிவகங்கை கவுரி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான இடத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜி.பாஸ்கரனின் உறவினர்கள் அபகரித்துள்ளதாக திமுக நகரச் செயலாளர் துரைஆனந்த் முதல்வரின் தனிப்பிரிவு, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோருக்கு புகார் அனுப்பி இருந்தார். இதுகுறித்து மாவட்ட வருவாய் லதா, வட்டாட்சியர் தர்மலிங்கம் தலைமையிலான வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் முன்னாள் அமைச்சர் ஜி.பாஸ்கரன் தரப்பில், ‘தங்களுக்கும், இடத்துக்கும் சம்பந்தமில்லை,’ என மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சிவகங்கை பெருமாள் கோயில் வளாகத்தில் பூசாரிகளுக்கு கரோனா நிவாரணத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிவாரணத் தொகையை வழங்கி அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசுகையில், கோயில் நிலத்தை அபகரித்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in