கலப்பட கருப்பட்டி தயாரிக்க பதுக்கல் - உடன்குடியில் 92 டன் சர்க்கரை பறிமுதல் : உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் கலப்பட கருப்பட்டி, பனங்கற்கண்டு தயாரிப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெள்ளை சர்க்கரை மூட்டைகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் கலப்பட கருப்பட்டி, பனங்கற்கண்டு தயாரிப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெள்ளை சர்க்கரை மூட்டைகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Updated on
1 min read

கலப்பட கருப்பட்டி தயாரிப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 92 டன் சர்க்கரையை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கருப்பட்டி தயாரிப்புக்கு தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பிரசித்தி பெற்ற ஊர். இங்குள்ள ஆலைகளில் சர்க்கரையை பயன்படுத்தி கலப்பட கருப்பட்டி மற்றும்பனங்கற்கண்டு தயாரிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. உணவுபாதுகாப்புத் துறை மாவட்ட அலுவலர் மாரியப்பன் தலைமையிலான அலுவலர்கள், அங்கு நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், 5 ஆலைகளில் கலப்படம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 1,340 மூட்டை (67 டன்) வெள்ளை சர்க்கரை மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.23.25 லட்சம். இந்த ஆலைகளுக்கு வெள்ளை சர்க்கரை விநியோகம் செய்த மொத்த விற்பனை நிறுவனத்திலும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அந்நிறுவனம் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் இன்றி செயல்பட்டது தெரியவந்தது. அங்கு உரிய ரசீதுகள் இல்லாமல் சுகாதாரமற்ற முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 டன் வெள்ளை சர்க்கரை பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 8.5 லட்சம்.

கொள்ளை லாபம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in