கோயில் நிலத்தை கையகப்படுத்த இந்து முன்னணி எதிர்ப்பு :

வேலூர் செல்லியம்மன் கோயிலுக்கு சொந்தமான சொத்தை, வேறோரு பயன்பாட்டுக்காகவும், வேலூர் புதிய பேருந்து நிலையம் விரிவாக்கத்துக்காக எடுக்க கூடாது என வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த இந்து முன்னணி நிர்வாகிகள்.படம்: வி.எம்.மணிநாதன்.

Updated on
1 min read

வேலூர் செல்லியம்மன் கோயில் நிலத்தை பேருந்து நிலையத்துக்காக கையகப்படுத்த இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் இந்து முன்னணி கோட்டத் தலைவர் மகேஷ் தலைமையில் அளித்த மனுவில், ‘‘வேலூர் புதிய பேருந்து நிலையத்துக்காக செல்லியம்மன் கோயில் நிலத்தை எடுத்துக் கொள்வதாக தெரியவந்துள்ளது. கோயில்களுக்கு சொந்தமான நிலங் களை யாருக்கும் கொடுக்கவோ, விற்கவோ அரசு உட்பட யாருக்கும் உரிமையில்லை. கோயில்கள் வசம்தான் நிலங்கள் இருக்க வேண் டும். கோயில் நிலத்தை வேறொரு பயன்பாட்டுக்கு கையகப்படுத்தக் கூடாது என இந்து முன்னணி, கோயில் பக்தர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்’’ என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in