ராணிப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளி ஒருவருக்கு கரோனா நிவாரண உதவித் தொகையை வழங்கிய அமைச்சர் ஆர்.காந்தி. அருகில், மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உள்ளிட்டோர்.
ராணிப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளி ஒருவருக்கு கரோனா நிவாரண உதவித் தொகையை வழங்கிய அமைச்சர் ஆர்.காந்தி. அருகில், மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உள்ளிட்டோர்.

தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை - தமிழக முதல்வர் படிப்படியாக நிறைவேற்றி வருகிறார் : அமைச்சர் ஆர்.காந்தி பெருமிதம்

Published on

தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை தமிழக முதல் வர் படிப்படியாக நிறைவேற்றிவருகிறார் என கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 லட்சத்து 31 ஆயிரத்து 402 குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் உதவித்தொகையாக ரூ.66 கோடியே 28 லட்சத்து 4 ஆயிரம் மற்றும் சமூக நலத்துறை சார்பில் 1,857 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை, மூன்றாம் பாலினத்தவர்கள் 95 பேருக்கு கரோான நிவாரண உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை தாங்கினார்.

இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நிவாரண உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ஆற்காடு சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியர் சிவன் அருள் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சர் ஆர்.காந்தி நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசும்போது, ‘‘ஊரடங்கு காலத்தில் மக்கள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக நிவாரண உதவித்தொகையுடன் 14 வகையான மளிகைப் பொருட் களை முதல்வர் ஸ்டாலின் வழங்கி யுள்ளார்.

கரோனா காலத்தில் மக்களைகாத்திட மருத்துவ கட்டமைப்பு களை அதிகரித்தும் ஆக்சிஜன் வசதியை அதிகரித்து நடவடிக்கை எடுத்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்போது தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. மாவட்ட ஆட்சியர் இரவு, பகல் என்று பாராமல் பணியாற்றி உள்ளார். இந்த அரசு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் அரசாக உள்ளது. தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை முதல்வர் படிப் படியாக நிறைவேற்றி வருகிறார். மக்களின் ஆட்சி என்பதால் அதன்படியே நடந்து வருகிறது’’ என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in