பணியின் போது உயிரிழந்த காவலர் குடும்பங்களுக்கு - மாவட்ட காவல் துறை சார்பில் நிவாரண தொகை : எஸ்பி செல்வகுமார் வழங்கினார்

பணியின் போது உயிரிழந்த காவலர் குடும்பத்தாருக்கு நிதியுதவி வழங்கிய வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார்.
பணியின் போது உயிரிழந்த காவலர் குடும்பத்தாருக்கு நிதியுதவி வழங்கிய வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார்.
Updated on
1 min read

பணியின் போது உயிரிழந்த காவலர்களின் குடும்ப உறுப்பினர் களுக்கான நிவாரணத்தொகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் நேற்று வழங்கினார்.

வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த செல்வராஜ் என்பவர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மே மாதம் 8-ம் தேதி உயிரிழந்தார். அதேபோல, வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றி வந்த மாலதி என்பவர் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சாலை விபத்தில் சிக்கி கடந்த ஏப்ரல் மாதம் 4-ம் தேதி உயிரிழந்தார்.

பணியின் போது இரு காவலர்கள் உயிரிழந்ததால் அவர்களது குடும்பத்தாருக்கு நிதியுதவி வழங்க வேலூர் மாவட்ட காவல் துறையில் பணியாற்றி வரும் காவல் துறையினர் முன் வந்தனர். அதன்படி, காவலர்கள் அளித்த 10 லட்சத்து 20 ஆயிரத்து 650 ரூபாய் பணியின் போது உயிரிழந்த 2 காவலர்களின் குடும்பத்தாருக்கு பிரித்து வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. சத்துவாச்சாரி காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றிய செல்வராஜ் குடும்பத்தாருக்கு 4 லட்சத்து 79 ஆயிரத்து 150 ரூபாயும், வடக்கு காவல் நிலைய பெண் காவலர் மாலதி குடும்பத்தாருக்கு 5 லட்சத்து 41 ஆயிரத்து 500 ரூபாயை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் வழங்கி இரு குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினார். அப்போது, எஸ்பி தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் அசோகன் உட்பட பலர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in