வழக்கறிஞர்கள் குடும்பங்களுக்கு நிவாரணம் கோரி வழக்கு: அரசுகள் பதிலளிக்க உத்தரவு :

வழக்கறிஞர்கள் குடும்பங்களுக்கு நிவாரணம் கோரி வழக்கு: அரசுகள் பதிலளிக்க உத்தரவு :
Updated on
1 min read

மதுரை எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ஸ்டாலின், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் 64 ஆயிரம் வழக்கறிஞர்கள் உள்ளனர். கரோனா தொற்று பரவலால் பெரும்பாலான வழக்கறிஞர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். மேலும் கடந்த ஓராண்டில் மட்டும் 230 வழக்கறிஞர்கள் கரோ னாவால் உயிரிழந்துள்ளனர். வழக்க றிஞர்கள் எழுத்தர்கள் பலரும் தொற்று பாதித்து இறந்துள்ளனர்.

பேரிடரால் பாதிக்கப்ப டுவோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பேரிடர் மேலாண்மைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் உயிரிழந்த அரசு ஊழியர்கள், நீதித்துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை நிவாரண உதவி வழங்கப்படுகிறது.

இதேபோல் கரோனா தொற் றால் உயிரிழந்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் எழுத்தர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங் கவில்லை.

இது தொடர்பாக தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் மற்றும் பிற வழக்கறிஞர்கள் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத் துள்ளன. இருப்பினும் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக் கவில்லை.

எனவே, கரோனா தொற்றால் உயிரிழந்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் எழுத்தர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு உத்த ரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியன் வாதிட்டார். பின்னர் மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள், இந்திய பார் கவுன்சில், தமிழ்நாடு- புதுச்சேரி பார் கவுன்சில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in