

தேர்தல் பிரச்சாரத்தின்போது முதல்வரிடம் வழங்கப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில் 100 பேருக்கு நலத் திட்ட உதவிகளை அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் வழங் கினர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 100 பேருக்கு அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை நேற்று வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர்கள் கூறியது:
தேர்தல் பிரச்சாரத்தின்போது உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அப்போது பல லட்சம் மனுக்கள் வழங்கப்பட்டன. இவற்றை ஆய்வு செய்து 100 நாட்களில் தீர்வு காண தனித் துறை, அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட் டத்தில் வழங்கப்பட்ட 4,211 மனுக்களில் முதற்கட்டமாக 801 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளன. இதில் 100 பேருக்கு முதியோர் ஓய்வூதியம், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட நலத் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 3,410 மனுக்கள் ஆய்வில் உள்ளன. அனைத்து மனுக்கள் மீதும் படிப்படியாகத் தீர்வு காண ப்படும் என்றனர்.