புதுடெல்லியில் சாலை விபத்தில் இறந்த உத்தமபாளையம் வீரர் உடல் இன்று அடக்கம் :

பிரபாகரன்
பிரபாகரன்
Updated on
1 min read

நேற்று முன்தினம் பணி முடிந்து நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது பேஸ் ஹாஸ்பிட்டல் கண்ட் எனும் இடத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவரது உடல் புதுடெல்லியில் இருந்து நேற்று விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.

பின்னர், ஆம்புலனஸ் மூலம் கம்பத்துக்கு இன்று (புதன்கிழமை) கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட உள்ளது. இவருக்கு திவ்யா (30) என்ற மனைவியும், லோகிதா (8), யுகாசினி(3) ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in