

சாத்தூர் அருகேயுள்ள ஒ.மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகவேல் (70). இவரது மகன் காளைச்சாமி (48). பேரன் மணிகண்டன் (24). சண்முக வேலிடம் தனக்கு சொத்தை எழுதிக் தருமாறு காளைச்சாமி அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை ஏற்பட்ட தகராறில் சண்முக வேலை, காளைச்சாமியும் அவரது மகன் மணிகண்டனும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் முதியவர் சண்முகவேல் காயமடைந்தார். உறவினர்கள் அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். சாத்தூர் தாலுகா போலீஸார் விசாரிக்கின்றனர்.