

தென்காசி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது. போதிய அளவுக்கு தடுப்பூசிகள் கையிருப்பு இருக்கும் காலங்களில், தினமும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இந்நிலையில், கடந்த 2 வாரங்களாக தடுப்பூசிகள் போதுமான அளவுக்கு கிடைக்க வில்லை. இதனால், அரசு மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும் மக்கள் ஏமாற்றம் அடையும் நிலை அடிக்கடி ஏற்படுகிறது.
மக்கள் ஏமாற்றம்
சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது, “தென்காசி மாவட்டத்தில் இதுவரை சுமார் ஒரு லட்சத்து 36 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி கையிருப்பு இல்லாத தால், 15-ம் தேதி (நேற்று) தடுப்பூசி செலுத்தும் பணி நடை பெறவில்லை. அடுத்தகட்ட ஒதுக் கீடு விரைவில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றனர்.