

உளுந்தூர்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டை என்கிற பிடாகம் ஊரட்சிக்கு உட்பட்ட குலாம்தாக்கா கிராமத்தில் இருந்து வீரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அரும்பலவாடி கிராமம் வரை தார்சாலை உள்ளது. இந்த தார்சாலையின் இருபுறமும், முட்செடிகள் வளர்ந்து சாலையை ஆக்கிரமித்துள்ளதால், அந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எதிரே வரும் வாகனத்துக்கு வழிவிடும்போது முட்புதரில் சிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இருசக்கர வாகனத்தில் செல்வோர் இரவு நேரங்களில் முட்செடிகளில் சிக்கி காயத்துக்கு ஆளாகின்றனர். எனவே முட்செடிகளை அப்புறப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.