

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிர படுத்துவது தொடர்பாக பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சி யர் கி.பாலசுப்ரமணியம் பேசியது:
பொதுமக்கள் கரோனா நோய்தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியினை பின்பற்ற வேண்டும். கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் ஆகிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வழிகாட்டு நெறி முறைகளைஅரசு வலியுறுத்தி உள்ளது. அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற தவறும் பட்சத்தில் பொதுமக்களுக்கு அபராதம் விதித்து தொற்று பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
காய்கறி, பலசரக்கு கடைகள், மார்க்கெட் பகுதிகள், மீன் மார்க்கெட் ஆகிய அதிகம் மக்கள் கூடும் இடங்களை காவல் துறை, உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். தகுந்த வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காத கடை உரிமையாளர்கள், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். மேலும் கண்காணிப்பு அலுவலர் கள் வாட்ஸ்-அப் குழுக்கள் அமைத்து விதிக்கப்படும் அபரா தம் குறித்த தகவல்களை மாவட்ட ஆட்சியருக்கு நாள் தோறும் தெரியப்படுத்த வேண்டும்.முகக்கவசம் அணியாமல் கடைகளுக்கு வரும் வாடிக்கையா ளர்களுக்கு பொருட்கள் வழங்கக் கூடாது என பேரூராட்சி, நகராட்சி அலுவலர்கள் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
ஒரே பகுதியில் மூன்று நபர்களுக்கு மேல் தொற்று பாதிப்பு இருப்பின் அப்பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து கண்காணிப்பதன் மூலம் தொற்றுபரவல் கட்டுப் படுத்தப்படுகிறது. எனவே இப் பணிகளை தொய்வில்லாமல் தொடர்ந்து மேற்கொள்ள வேண் டும் என்று தெரிவித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கார்த்திக்கேயன், இணை இயக்குநர்(நலப்பணிகள்) மருத்துவர் ரமேஷ்பாபு, துணை இயக்குநர் (சுகாதாரம்) மருத்துவர் செந்தில்குமார், கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.