

திண்டுக்கல் மாவட்டத்தில் சமூக இடைவெளியுடன் வந்து மதுபானங்களை வாங்கிச் செல்வதற்கு வசதியாக டாஸ்மாக் மதுக் கடைகள் முன் தடுப்புகள் அமைத்து வட்டங்கள் வரையப்பட்டுள்ளன.
கரோனோ இரண்டாவது அலை பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து டாஸ்மாக் மதுக் கடைகள் மூடப்பட்டன. தற்போது கரோனா பரவல் ஓரளவு குறைந்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இன்று முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க ஊழியர்கள் நேற்று ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டனர். கூட்ட நெரிசலைத் தவிர்க்க கடைகள் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் வட்டங்கள் வரையப்பட்டுள்ள இடத்தில் ஒவ்வொருவராக நின்று மதுபானங்களை வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.