

கரோனா பேரிடர் காலத்தில் நோயாளிகளுக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொங்கராயகுறிச்சி கிளையும், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்தவங்கியும் இணைந்து கொங்கராயகுறிச்சி புதிய மர்கஸ் வளாகத்தில் ரத்த தான முகாமை நடத்தின. முகாமுக்கு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்ட துணைத் தலைவர் தமீம் அன்சாரி தலைமை வகித்தார். டிஎஸ்பி, வெங்கடேசன் ரத்ததான முகாமை தொடங்கி வைத்து பேசினார். 56 பேர் ரத்ததானம் செய்தனர்.