

அடுத்த கட்ட தளர்வுகள் நாளைமுதல் அமலாகும் என அரசு அறிவித்துள்ள நிலையில், காஞ்சியில் நகைக் கடைகள், பாத்திரங்கள் விற்பனை கடைகள், ஜவுளிக் கடைகள் போன்றவை நேற்றே திறக்கப்பட்டது தொடர்பாக ஆட்சியர் மகேஸ்வரிக்கு புகார்கள் வந்தன.
பின்னர், ஆட்சியர் உத்தரவின்பேரில், நகராட்சி ஆணையர் மகேஸ்வரி பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தினார்.
அப்போது விதிகளை மீறி செயல்பட்ட 25 கடைகளுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதித்து உடனடியாக கடைகளை மூடும்படியும் உத்தரவிட்டார்.