

கீழ்புவனகிரியைச் சேர்ந்தவர் கரிகாலன்(50). பெயிண்டர்.இவரது மனைவி பச்சையம்மாள்.(43) . இவர்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டு மகள் உள்ளனர். இதில் ஒரு மகளுக்கு திருமணமாகிவிட்டது. கரிகாலன் பல பெண்களுடன் கூடா நட்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நேற்று பச்சையம்மாளுக்கும், கரிகாலனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கரிகாலன் கத்தியால் பச்சையம்மாளை கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார். இதுகுறித்து தகவறிந்த புவனகிரி போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய கரிகாலனை போலீஸார் தேடி வருகின்றனர்.