

சேலம் மாவட்டத்தில் நேற்று 894 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசி 18 ஆயிரத்து 100 டோஸ் வந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் நேற்று 894 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், சேலம் மாநகராட்சிப் பகுதியில் 162 பேரும், வட்டார அளவில் சங்ககிரியில் 68, ஓமலூரில் 54, மேச்சேரி 35, தாரமங்கலத்தில் 28, வீரபாண்டியில் 25, பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசலில் தலா 29, அயோத்தியாப்பட்டணத்தில் 27, ஆத்தூரில் 24, மேட்டூர் நகராட்சிப் பகுதியில் 19 மற்றும் பிற மாவட்டத்தில் இருந்து வந்தவர்களில் 202 பேர் என மாவட்டம் முழுவதும் 894 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
சேலம் மாவட்டத்துக்கு கோவிஷீல்டு தடுப்பூசி 18 ஆயிரத்து 100 டோஸ்கள் வந்துள்ளது. இவை சேலம் மற்றும் ஆத்தூர் சுகாதார மாவட்டங்களுக்கு உட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.