கரூர் மாவட்டத்தில் திமுக சார்பில் இன்று - ரேஷன்கார்டுதாரர்களுக்கு 4 கிலோ அரிசி வழங்கும் திட்டம் : உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

கரூர் மாவட்டத்தில் திமுக சார்பில் இன்று -  ரேஷன்கார்டுதாரர்களுக்கு 4 கிலோ அரிசி வழங்கும் திட்டம்  :  உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
Updated on
1 min read

கரூர் மாவட்ட திமுக சார்பில் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தின் கீழ், கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 3,19,816 ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா 4 கிலோ அரிசி வீதம் 1,279 டன் அரிசி வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஜூன் 13) நடைபெறுகிறது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி க.பரமத்தியில் மாலை 3.30 மணி, கரூர் தொகுதியில் பசுபதிபாளையம் மெயின்ரோட்டில் மாலை 4 மணி, கிருஷ்ணராயபுரத்தில் மாலை 4.30 மணி, குளித்தலை மணத்தட்டையில் மாலை 5 மணிக்கு மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பங்கேற்று ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி வழங்கி இத்திட்டத்தை தொடங்கி வைக் கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in