மொபைல் ஆப் சர்வர் முடங்கியதால் - சிவகங்கையில் கரோனா பரிசோதனை // விவரத்தை பதிவு செய்வதில் சிக்கல் :

மொபைல் ஆப் சர்வர் முடங்கியதால் -  சிவகங்கையில் கரோனா பரிசோதனை // விவரத்தை பதிவு செய்வதில் சிக்கல் :
Updated on
1 min read

சிவகங்கையில் மொபைல் ஆப் சர்வர் முடங்கியதால் கரோனா பரிசோதனை விவரத்தைப் பதிவு செய்ய முடியாமல் ஊழியர்கள் தவித்தனர்.

கரோனா தொற்றை உறுதி செய்ய ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில் ஒருவரின் மூக்கு, தொண்டையில் இருந்து சளி மாதிரி எடுத்து பரிசோதிக்கின்றனர். பின்னர், சம்பந்தப்பட்ட நபரின் பெயர், முகவரி போன்ற விவரங்களை ஆர்டிபிசிஆர் மொபைல் ஆப்பில் தொழில்நுட்ப உதவியாளர்கள் பதிவு செய்கின்றனர். அதன் பிறகே சம்பந்தப்பட்டவரின் மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படுகிறது. அதன் பின் பரிசோதனை முடிவு வந்த பிறகு, இது தொடர்பான விவரத்தையும் எஸ்எம்எஸ்சில் அனுப்புகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை ஆர்டிபிசிஆர் மொபைல் ஆப் சர்வர் முடங்கியது. இதனால் சளி மாதிரி எடுத்தோரின் விவரங்களை பதிவு செய்ய முடியாமல் சிவகங்கையில் உள்ள தொழில்நுட்ப உதவியாளர்கள் சிரமப்பட்டனர்.

மேலும் பதிவு செய்ததன் அடிப்படையிலேயே அரசு கரோனா பாதிப்பு புள்ளி விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்பதால், மாலை 4 மணிக்கு மேல் சர்வர் இணைப்பு கிடைத்ததும் அவசர, அவசரமாக விவரங்களை தொழில்நுட்ப உதவியாளர்கள் பதிவு செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in