

காவேரிப்பட்டணம் சுற்று வட்டாரங்களில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு உணவு, முகக்கவம் உள்ளிட்டவைகளை போலீஸார் வழங்கினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலையோரம், ஆற்றுப் படுகைகள், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் ஆதரவற்றோர், ஏழை எளிய மக்கள் வசிக்கின்றனர். கரோனா ஊரடங்கால் உணவின்றி தவித்து வருபவர்களுக்கு காவேரிப்பட்டணம் போலீஸார் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் உணவுப் பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் முகக்கவசம் உள்ளிட்டவைகளை வழங்கினர். இந்நிகழ்வில் காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலீஸார் கலந்து கொண்டனர்.