ஊத்துக்குளி, குன்னத்தூர் பகுதிகளில் - தடுப்பூசிகள் செலுத்தும் தகவலை முன்கூட்டியே அறிவிக்க வலியுறுத்தல் :

ஊத்துக்குளி, குன்னத்தூர் பகுதிகளில்  -  தடுப்பூசிகள் செலுத்தும் தகவலை  முன்கூட்டியே அறிவிக்க வலியுறுத்தல் :
Updated on
1 min read

ஊத்துக்குளி, குன்னத்தூர் பகுதிகளில் தடுப்பூசிகள் செலுத்தப்படும் நாள், இடம் உள்ளிட்ட விவரங்களை பொதுமக்களுக்குமுன்கூட்டியே அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஊத்துக்குளி வட்டாட்சியர் மற்றும் ஊத்துக்குளி, குன்னத்தூர் வட்ட மருத்துவஅலுவலர்களிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊத்துக்குளி வட்ட செயலாளர் கே.ஏ.சிவசாமி நேற்று அளித்த மனுவில், "ஊத்துக்குளி வட்டம்முழுவதும் பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும், ஊத்துக்குளி பேரூராட்சிகளில் வார்டு வாரியாகவும், கிராமப்புறங்களில் ஊராட்சி வாரியாகவும் பரிசோதனைகள் செய்ய வேண்டும்.

ஊத்துக்குளி, குன்னத்தூர் பகுதிகளில் எந்தெந்த மையங்கள், தேதிகளில் எவ்வளவு தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்ற தகவலை முன்கூட்டியே அறிவிக்கவேண்டும்.ஊத்துக்குளி அரசுமருத்துவமனைக்கு மருத்துவர்கள், செவிலியர்களை அதிகப்படியாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊத்துக்குளி, குன்னத்தூர் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும்.

ஊத்துக்குளி மருத்துவமனையில் செயல்பட்டுவந்த வெளிநோயாளிகள் பிரிவு தற்போது செயல்படுவதில்லை. எனவே, சுமார் 400 நோயாளிகள், சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோயாளிகள் மருந்து மாத்திரைகள் வாங்க மிகவும் சிரமப்படுகின்றனர்.

எனவே, புறநோயாளிகள் பிரிவை உடனடியாக செயல்படுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in