திருநங்கைகளுக்கு கரோனா நிவாரண நிதி : விருதுநகரில் அமைச்சர்கள் வழங்கினர்

விருதுநகரில் திருநங்கைகளுக்கு கரோனா நிவாரணத் தொகை வழங்கிய அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு. அருகில் மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன்.
விருதுநகரில் திருநங்கைகளுக்கு கரோனா நிவாரணத் தொகை வழங்கிய அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு. அருகில் மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன்.
Updated on
1 min read

திருநங்கைகள் 235 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.4.70 லட்சம் கரோனா நிவாரண நிதியை வருவாய்த் துறை அமைச்சர் மற்றும் தொழில் துறைஅமைச்சர் வழங்கினர்.

விருதுநகர் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் திருநங்கைகளுக்கு முதல் கட்ட கரோனா நிவாரண நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்றது.

மாவட்ட ஆட்சியர் கண்ணன், தென்காசி எம்.பி. தனுஷ்குமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சீனிவாசன், தங்கபாண்டியன், அசோகன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர்கள் சாத்தூர் ராமச் சந்திரன், தங்கம் தென் னரசு ஆகியோர் திருநங்கைகள் 235 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.4.70 லட்சம் மதிப்பில் கரோனா நிவாரண நிதி உதவியை வழங்கினர்.

அதைத்தொடர்ந்து, 3 மருத்து வர்கள், 1 செவிலியர், 27 ஆய்வக நுட்புனர்கள் என மொத்தம் 31 நபர்களுக்கு தற்காலிக பணி நியமன ஆணைகளை அமைச்சர்கள் வழங்கினர்.

விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் மங்களரா மசுப்ரமணியன், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) ஜெயக்குமார், மாவட்ட சமூகநலத் துறை அலுவலர் இந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in