முன்னாள் ராணுவ வீரர்கள் கவனத்துக்கு.. :

முன்னாள் ராணுவ வீரர்கள் கவனத்துக்கு.. :
Updated on
1 min read

முன்னாள் ராணுவ வீரர்கள் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி தெரி வித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்று, மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் சிறப்பு வேலைவாய்ப்புப் பிரி வில் வேலைவாய்ப்புக்கென பதிவு செய்தவர்கள், 2017, 2018 மற்றும் 2019-ம் ஆண்டில் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவைப் புதுப்பிக்கத் தவறியிருக்கலாம். அவ்வாறு தவறியவர்கள் தங்களது பதிவை மூன்று மாதங்களுக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம்.

இச்சலுகையைத் தகுதியுள்ள முன்னாள் படைவீரர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இச்சலுகை ஒருமுறை மட்டுமே வழங்கப்படும், எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in