

கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 20 பேர் உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண் ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால் கரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாவட்டத்தில் கரோனா தொற்றால் 293 பேர் பாதிக்கப்பட்டனர். 616 பேர் கரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினர். தற்போது 2941 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், சிறப்பு சிகிச்சை மையங்கள், வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை, சேலம், வேலூர், கிருஷ்ணகிரி நகரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 9 ஆண்களும், பெண் ஒருவரும் என 10 பேர் உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 246 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 36 ஆயிரத்து 41 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, 32 ஆயிரத்து 854 பேர் குணமடைந்துள்ளனர்.
ஈரோட்டில் பாதிப்பு குறைகிறது