தாமதமின்றி மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் : அதிமுக, பாமக எம்எல்ஏக்கள் விழுப்புரம் ஆட்சியரிடம் மனு

விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரையிடம் அதிமுக, பாமக எம்எல்ஏக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரையிடம் அதிமுக, பாமக எம்எல்ஏக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
Updated on
1 min read

விழுப்புரம் ஆட்சியர் அண்ணா துரையிடம் நேற்று அதிமுக எம்எல்ஏக்கள் வானூர் சக்கரபாணி, திண்டிவனம் அர்ஜூணன், பாமக எம்எல்ஏ மயிலம் சிவகுமார் ஆகியோர் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர், திண்டிவனம், மயிலம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் கரோனா தொற்று தீவிரமாக உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் தேவையான படுக்கை வசதி, ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ சேவைகள் தாமதமின்றி கிடைக்க ஆவண செய்ய வேண்டும். கிராமங்கள், நகரங்களில் தங்கி தனிமைப்படுத்திக் கொண்டவர்களுக்கு தேவையான உதவிகள் செய்திட வேண்டும்.

தொற்றுப்பாதிப்பில் இறந்த வர்கள் உடலை அவர்கள் சம்பிரதாயப்படி அடக்கம் செய்திட உதவிடவேண்டும். கரோனா தொற்று பரவா வண்ணம் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என அம்மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in