

வேளாண் துறை அமைச்சர் அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் நேற்று ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள முட்டம் கிராமத்தில் இருந்து வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் காணொலி காட்சி மூலம் நேற்று அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட் டம் நடத்தினார்.
இதில் குறுவை சாகுபடிக்கு தேவையான உரம் இருப்பு, திட்டங்கள், தண்ணீர் தேவை உள்ளிட்டவை பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண் உழவர்நலத்துறை செயலாளர் சமயமூர்த்தி, இயக்குநர் தட்சிணாமூர்த்தி மற்றும் உயர் அலுவலர்கள், அனைத்து மாவட்ட வேளாண் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.